பொன்னேரி அருகே ஏரியில் இருந்து மண் எடுத்த லாரியை சிறைபிடித்து மக்கள் போராட்டம்
ஏரியில் இருந்து மண் திருடப்படுவதால் விவசாயம் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக புகார் தெரிவித்தனர்.;
பொன்னேரி அருகே லாரியை சிறை பிடித்து கிராம மக்கள் போராட்டம்
பொன்னேரி அருகே லாரியை சிறை பிடித்து கிராம மக்கள் போராட்டம். சீரமைப்பு பணிகள் என்ற பெயரில் ஏரியில் இருந்து மண் திருடப்படுவதாக குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே ஏரியில் மண் திருடப்படுவதாக கூறி லாரியை சிறை பிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆரணியாற்றில் உள்ள லட்சுமிபுரம் தடுப்பணையில் இருந்து காட்டூர் ஏரிக்கு செல்லும் கால்வாய் தூர்வாரும் பணிகளை பொதுப்பணித்துறை மேற்கொண்டு வருகிறது. வேலூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ஏரியில் மண் திருடப்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் லாரியை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் துணையோடு ஏரியில் இருந்து மண் திருடப்பட்டு அருகில் உள்ள செங்கல் சூளையில் பதுக்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர். ஏரியில் இருந்து மண் திருடப்படுவதால் விவசாயம் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக புகார் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.