பழவேற்காடு கடற்கரை பகுதியில் பனை விதைகள் நடும் விழா

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு கடற்கரை பகுதியில் பனை விதைகள் நடும் விழா நடைபெற்றது.;

Update: 2023-08-04 13:21 GMT

பழவேற்காடு கடற்கரை பகுதியில் பனை விதைகள் நடப்பட்டது.

பொன்னேரி அருகே பழவேற்காட்டில் பனை  விதைகள் நடும் விழா நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு அடுத்த லைட் ஹவுஸ் ஊராட்சிக்குட்பட்ட வைரவன் குப்பம் கடற்கரைப் பகுதியில் பனைவிதை நடும் விழா நடைபெற்றது. இயற்கை அரண் சமூக நல அறக்கட்டளை நிர்வாகி ஏகாட்சரம் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஊராட்சி மன்ற தலைவர் கஜேந்திரன் கலந்துகொண்டு பனை விதைகளை நட்டினார்.

அவருடன் வைரவன் குப்பம் கூட்டுறவு சங்க தலைவர் ஞானமூர்த்தி,பழவேற்காடு வார்டு உறுப்பினர் ஹாரூன் மற்றும் மகளிர் குழுவினர் பலர் உடன் இருந்தனர்.

இதேபோன்று மீஞ்சூர் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி நிர்வாகத்தினர் மழை நேரத்தில் இந்த பனை விதைகளை தங்களது கிராமத்தில் உள்ள ஏரி குளங்கள் அமைந்துள்ள கரை ஓரங்களில் இந்நேரத்தில் விதைகளை நடுவதால் அதன்மூலம் கிடைக்கும் நன்மைகள் மேலும் நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் இருப்பது. மேலும் நமக்கு கேடு விளைவிக்கும் ரசாயனம் கலந்த சர்க்கரையை தவிர்க்க முடியும்.

பனை மரத்திலிருந்து நமக்கு கிடைக்கும் நாட்டு சர்க்கரை, பனங்கற்கண்டு உள்ளிட்ட பொருட்களை தயார் செய்து அவை பயன்படுத்துவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்தும் சமூக ஆர்வலர்கள் எடுத்துக்கூறி அனைவரும் கிராமங்களில் உள்ள மக்கள் கட்டாயம் ஒரு பனை விதையாவது விதைத்திட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பனை மர விதைகள் நடும் பணியானது தற்போது கிராமங்களில் இருந்து நகரம் மற்றும் புறநகர் பகுதிகளுக்கும் பரவி வருவது ஆரோக்கியமான ஒன்றாகும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News