மீஞ்சூரில் புறக்காவல் நிலையம்: ஆவடி மாநகர காவல் ஆணையர் திறப்பு

மீஞ்சூரில் புறக்காவல் நிலையத்தை ஆவடி மாநகர காவல் ஆணையர் திறந்து வைத்தார்.;

Update: 2023-02-26 02:30 GMT

மீஞ்சூர் அருகே புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்த ஆவடி மாநகர காவல் ஆணையர்.

ஆவடி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட மீஞ்சூர் காவல் நிலையத்தின் மற்றொரு எல்லையில் அத்திப்பட்டு புறக்காவல் நிலையம் புதியதாக அமைக்கப்பட்டது. அதானி துறைமுகம், எண்ணூர் துறைமுகம், வடசென்னை அனல் மின் நிலையம், எண்ணெய் நிறுவனங்கள் என நாள்தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் பயணிப்பதை கண்காணிக்கவும், சட்டம், ஒழுங்கு பிரச்சினைகளை கவனிக்கவும் புதிய புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது.

இதனை ஆவடி மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் ரிப்பன் வெட்டி வைத்து குத்துவிளக்கேற்றி புறக்காவல் நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆணையர் மீஞ்சூர் காவல் நிலைய எல்லையில் தொழில் நிறுவனங்கள் அதிகளவில் இருப்பதால் போக்குவரத்தை கண்காணிக்கவும், சட்டம், ஒழுங்கு பிரச்சினைகளை கையாளவும் அத்திப்பட்டில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

புறக்காவல் நிலையத்தில் 10பேர் பணியமர்த்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். சாலைகளை பொதுமக்களுக்கு தொந்தரவு செய்யும் திருநங்கைகளை கட்டுப்படுத்த சமூக நலத்துறையுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கடந்த 2மாதங்களில் ஆவடி மாநகர காவல் எல்லையில் 90கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதை பழக்கத்தின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Tags:    

Similar News