ஆரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.21 லட்சம் செலவில் கழிப்பறை திறப்பு
ஆரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.21 லட்சம் செலவில் கழிப்பறை திறக்கப்பட்டுள்ளது.;
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆரணி பேரூராட்சியில் அரசு மகளிர் மேல்நிலைபள்ளி இயங்கி வருகிறது இதில் சுமார் 1,200க்கும் மேற்பட்ட மாணவிர்கள் ஆறாம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்புவரை கல்விபயின்று வருகின்றனர்.
மாணவர்களுக்குபோதுமான கழிப்பிட வசதிகள் இல்லாத நிலையில் ரோட்டரி கிளப் சென்னை மற்றும் நாடி டெக்னாலஜி இணைந்து சமூக பங்களிப்பு நிதி மூலம் ரூ.21 லட்சம் மதிப்பிலான இரண்டு கழிப்பறைகள் 50க்கும் மேற்பட்ட மாணவியர்கள் அமரக்கூடிய இருக்கைகள் வழங்கும் நிகழ்ச்சி, பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் காவிரி தலைமை தாங்கினார், ரோட்டரி மெட்ராஸ் பிரசிடெண்ட் ஜெயஸ்ரீ ஸ்ரீதர், நாடி கம்பெனியின் மேனேஜிங் டைரக்டர் கபர், மாதவரம் ரோட்டரி கிளப் பிரசிடெண்ட் ராமகிருஷ்ணன் ஆகியோர் பங்கு பெற்றிருந்தனர்.
மேலும் பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் சீனிவாசன், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் ஹேமபூஷணம், நகரச் செயலாளர் முத்து, தியாகராஜா கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் ரவி, சமூக ஆர்வலர் கருணாகரன், பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள், ஆசிரியர்கள் மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.
வருங்காலங்களில் பள்ளியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதன்மை பெரும் மாணவிகளுக்கு மேல்நிலைப் படிப்பை அவர்கள் தொடர அனைத்தும் இலவசமாக அவர்களுக்கு வழங்கப்படும் என ரோட்டரி கிளப் நிர்வாகிகள் உறுதி அளித்தனர்.
பின்னர் மாணவ, மாணவியர்களின் கண் கவரும் பரதநாட்டியம் மற்றும் சிலம்பம் போட்டிகள் நடைபெற்றன. விழாவின் முடிவில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் நன்றி உரையாற்றினார்.