சிறுவாபுரி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜை துவக்கம்

சிறுவாபுரி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைகள் துவங்கப்பட்டு உள்ளது.

Update: 2022-08-18 06:45 GMT

சிறுவாபுரி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைகள் துவங்கின.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. செவ்வாய்க்கிழமை 6வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. சிறுவாபுரி முருகன் கோவிலில் கடந்த 2003ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட நிலையில் 1கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு 19ஆண்டுகளுக்கு பிறகு இம்மாதம் 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இதனை தொடர்ந்து கும்பாபிஷேக விழா ஆலய வளாகத்தில் கணபதி பூஜையுடன் தொடங்கியது. கணபதி பூஜை, கோ பூஜை, தனபூஜை, நவக்கிரக பூஜைகளுடன் சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு தீபதூப ஆராதனைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து 5நாட்கள் சிறப்பு பூஜைகளுடன் 21ஆம் தேதி ஞாயிறன்று காலை 9.00 - 10.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

மேலும் கோவிலுக்கு பக்தர்கள் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் வருகை தரவுள்ளதால் வாகனங்கள் நிறுத்த போலீஸ் கண்காணிக்கும் தற்காலிக கண்காணிப்பு முகாம் உள்ளிட்ட பணிகளை ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி. சாரதி மற்றும் கோவில் செயல் அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் பார்வையிட்டனர்.

Tags:    

Similar News