நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு கடைகள்: அதிகாரி அகற்றம்

வன்னிப்பாக்கம் ஊராட்சி மேட்டுப்பாளையும் கூட்டுச் சாலையில் ஆக்கிரமிப்பு கடைகளை அதிகாரிகள் அகற்றினர்.

Update: 2021-06-27 08:18 GMT

திருவள்ளூர் மாவட்டம் வன்னிப்பாக்கம் ஊராட்சியில் மேட்டுப்பாளையம் கூட்டுச் சாலையில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகதிாரிகள் அகற்றினர்.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட வன்னிப்பாக்கம் ஊராட்சிக்கு அடங்கிய மேட்டுப்பாளையம் கூட்டுச் சாலையில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் சுமார் 10க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் இருந்தது. 

ஆக்கிரமிப்பு கடைகளை மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராமகிருஷ்ணன் ஜே.சி.பி இயந்திரங்கள் கொண்டு அகற்றினார்.

பின்பு வட்டார வளர்ச்சி அலுவலர் வன்னிப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவரிடம் அரசு அறிவிப்பு பலகை வைக்குமாறு அவர் தெரிவித்தார். அதை மீறி கடைகளை வைப்பவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News