வடக்குநல்லூர் ஊராட்சியில் நாட்டுநலப்பணி திட்ட முகாம்
வடக்குநல்லூர் ஊராட்சியில் கல்லூரி மாணவர்களின் நாட்டுநலப்பணி திட்ட முகாமை ஊராட்சி மன்ற தலைவர் ஜானகி அன்பு துவக்கி வைத்தார்
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், வடக்குநல்லூர் ஊராட்சியில் சென்னை சேலைவாயலில் இயங்கிவரும் திருத்தங்கல் நாடார் கல்லூரி மாணவ-மாணவிகள் 100 பேர் பங்கேற்கும் ஏழு நாள் நாட்டு நலப்பணி திட்ட முகாம் துவக்க விழா நடைபெற்றது.
வடக்கு நல்லூர் ஊராட்சியில் உள்ள சமுதாய கூட வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை ஊராட்சி மன்ற தலைவர் ஜானகி அன்பு தலைமை தாங்கி நாட்டுநலப்பணி திட்ட முகாமை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
கல்லூரியின் தலைவர் சவரிமலையான், தாளாளரும்,செயலாளருமான செல்லப்பழம், முதல்வர் முனைவர் ஸ்ரீவித்யா, துணை முதல்வர் முனைவர் ஆசைத்தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊராட்சிமன்ற துணைத்தலைவர் தமிழ்ச்செல்வன்,உலகநாத அரசு கல்லூரி கெளரவ விரிவுரையாளர் முனைவர் ரமேஷ், வார்டு உறுப்பினர்கள் பிரபாகரன், நதியா, அருணா, ஆரோக்கியமேரி, சீனிவாசன், ஊராட்சி செயலர் தண்டபாணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
முன்னதாக அனைவரையும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் சம்பத்குமார் வரவேற்றார். முடிவில், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் வெங்கடேசன் நன்றி கூறினார்.