பொன்னேரி மகாதேவாய நாட்டிய பள்ளியில் பரதநாட்டிய சலங்கை பூஜை விழா..!
பொன்னேரியில் பரதநாட்டிய சலங்கை பூஜை விழா நடைபெற்றது.;
பொன்னேரி மகாதேவாய நாட்டிய பள்ளியின் 3வது பரதநாட்டிய சலங்கை பூஜை விழா நடந்தது.
தமிழ்க் கலையின் முக்கிய கலையான பரத நாட்டிய சலங்கை பூஜை விழா பொன்னேரியில் நடைபெற்றது. மகாதேவாய நாட்டியப் பள்ளியின் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் பள்ளி மாணவிகள் ஆறு பேர் சலங்கை அணிந்து நடனம் ஆடினர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் மகாதேவாய நாட்டிய பள்ளியின் மூன்றாவது பரதநாட்டிய சலங்கை பூஜை விழாவில் மாணவிகள் முதன் முறையாக சலங்கை அணிந்து ஆடியது காண்போரை கண்கவர்ந்தது.
தமிழ் கலையின் முக்கிய கலையான பரதநாட்டியம் பயிலும் மாணவர்கள் நாட்டியக் கலையை கற்க ஆரம்பித்து மூன்று ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக சலங்கை அணிந்து ஆடும் நிகழ்வே சலங்கை பூஜை விழாவாகும். நாட்டியப் பள்ளியில் பயின்று வரும் ஆறு மாணவிகள் முதன் முறையாக சலங்கை அணிந்து ராகம், தாளம், சுதியோடு ஆடி காண்போரை வியக்க வைத்தனர்.
மகாதேேவாய நாட்டிய பள்ளியின் குரு பூஜா பயிற்றுவித்தலில் புஷ்பாஞ்சலி, ஜதீஸ்வரம், அலாரிப்பு, கீர்த்தனை உள்ளிட்ட நாட்டிய உருப்படிகளுடன், இராகமாலிகை, திஸ்ரம், ஆரபி போன்ற ராகங்களோடு ஆதி, ரூபகம், மிஸ்ரபம் உள்ளிட்ட தாளங்களுக்கு ஏற்ப பார்வையாளர்கள் அனைவரின் உள்ளங்களையும் கொள்ளை கொள்ளும் வகையில் சிறப்பாக நடனமாடினர். பரதநாட்டியம் ஆடிய மாணவிகளுக்கு சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றவர்கள் பரிசுகளை வழங்கினர். இவ்விழாவில் பெற்றோர்கள் மற்றும் பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பரதம் வரலாறு
அறுபத்து நான்கு கலைகளில் ஒன்றாக கருதப்படும் பரதக்கலை, பாரத நாட்டின் தெய்வீகக் கலையாக போற்றப்பட்டு வருகிறது. காரணம் ஆரம்ப கால மக்கள் அதிக துயரத்தில் ஆழ்ந்து கிடந்தனர். இந்நிலை மாறி எங்கும் இன்பம் உண்டாகும் வண்ணம், அனைவரும் புரிந்து கொள்ளுமாறு நான்கு வேதங்களில் இருந்து ஒரு பொழுதுபோக்கை உருவாக்குமாறு இந்திரன் பிரம்மாவை வேண்டினார்.
இதற்கமைய ரிக் வேதத்தில் இருந்து நாட்டியத்தையும், யசூர் வேதத்திலிருந்து அபிநயத்தையும், சாம வேதத்திலிருந்து இசையையும், அதர்வ வேதத்திலிருந்து ரஸத்தினையும் தொகுத்து ஐந்தாம் வேதமாக நாட்டியக்கலையினை படைத்தார் என்பது வரலாறு.