சின்னம்பேடு ஊராட்சியில் ரூ.5 லட்சம் மதிப்பில் புதிய தார் சாலை
சின்னம்பேடு ஊராட்சியில் மாவட்ட கவுன்சிலர் நிதி மூலம் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது.
திருவள்ளூர்மாவட்டம், பொன்னேரி தாலுக்கா சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது சின்னம்பேடு ஊராட்சி. இந்த ஊராட்சியில் உள்ள பெருமாள் கோயில் தெரு பகுதியில் சாலை வசதி செய்து கொடுக்கக்கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட கவுன்சிலர் தேவி தயாளனிடம் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.
இவர்களது கோரிக்கையை ஏற்று மாவட்ட கவுன்சிலர் தேவிதயாளன் தனது தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் புதிய தார்சாலை அமைக்க உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் இப்பணிக்காக ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கியதாக கூறப்படுகிறது. அதன்படி அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்பணிகளை மாவட்ட கவுன்சிலர் தேவி தயாளன் காங்கிரஸ் கட்சி மாநில விவசாய அணிசெயலாளர் தயாளன், சின்னம்பேடு ஒன்றிய கவுன்சிலர் சந்திரசேகர், சின்னம்பேடு ஊராட்சி மன்றத் தலைவர் ஜான்சி ராணி ராஜா ஆகியோர் மேற்கண்டப் பணியை நேரில் ஆய்வு செய்து விரைவாக முடித்து கொடுக்கமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.