பொன்னேரி அருகே புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை: கணவன் கைது
பொன்னேரி அருகே திருமணமாகி 11 மாதங்களில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக இருந்த போன புதுப்பெண் கணவர் கைது செய்யப்பட்டார்.;
பொன்னேரி அருகே இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் சார் ஆட்சியர் விசாரணையை தொடர்ந்து கணவரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த சிறுவாக்கம் சானார்பாளையத்தில் திருமணமாகி 11மாதங்களே ஆன ஆர்த்தி(எ) தனலட்சுமி (வயது 20). தற்கொலை செய்து கொண்டதாக நேற்று கணவர் முரளிகிருஷ்ணன் குடும்பத்தினர் தெரிவித்த நிலையில் மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக நேற்று புகார் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து பொன்னேரி போலீசார், சார் ஆட்சியர் விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தனலட்சுமி மரணத்திற்கு காரணமான கணவர் குடும்பத்தினரை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, பொன்னேரி - திருவொற்றியூர் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து கணவர் முரளிகிருஷ்ணன் குடும்பத்தினரை காவல்துறையினர் விசாரணைக்காக பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
இதனைத்தொடர்ந்து பிரேத பரிசோதனை முடித்து பெண்ணின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. சார் ஆட்சியர் விசாரணையை தொடர்ந்து தற்கொலைக்கு தூண்டுதல் பிரிவில் வழக்கு பதிந்து கணவர் முரளிகிருஷ்ணன் ( வயது 28) பொன்னேரி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.