மீஞ்சூரில் மேம்பாலப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா :எம்.பி. பங்கேற்பு

New Fly Over Construction Inauguration பொன்னேரி அடுத்த மீஞ்சூரில் ரயில்வே மேம்பாலத்தை இணைப்பதற்கான பாலப் பணிகளை எம்பி ஜெயக்குமார் அடிக்கல் நாட்டினார்.;

Update: 2024-02-05 10:00 GMT

ஜெயக்குமார் எம்.பி. 


New Fly Over Construction Inauguration

மீஞ்சூரில் ரயில்வே மேம்பாலத்தை இணைப்பதற்கான பாலப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா. ஜூன் - 2025ல் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி, மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. ரயில்வே தண்டவாளத்தின் மேல் பாலப் பணிகள் முடிவடைந்த நிலையில் இணைப்பு பாலப் பணிகள் தொடங்கப்படாமலே இருந்து வந்தது. நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து பாலப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. திருவள்ளூர் காங்கிரஸ் எம்பி ஜெயக்குமார், பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் ஆகியோர் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர். மீஞ்சூரில் இருந்து காட்டூர் வழியே திருப்பாலைவனம் வரை செல்லும் சாலையில் ரயில்வே தண்டவாளத்தை கடப்பதற்காக பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்த உயர்மட்ட மேம்பால பணிகள் ஜூன் - 2025ல் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags:    

Similar News