பொன்னேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் பயிற்சி
பொன்னேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் பயிற்சி அளித்தனர்.;
பொன்னேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் பயிற்சி அளித்தனர்.
பொன்னேரியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் அரசினர் மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கான முதலுதவி பயிற்சி அளித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் திருவள்ளூர் மாவட்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவின் நான்காம் பட்டாலியன் பிரிவு கமாண்டர் மணிகண்டன் தலைமையில் முதலுதவி பயிற்சி நடைபெற்றது. அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த ஆறாம் வகுப்பு முதல்,பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் இதில் பங்கேற்று பேரிடர் காலங்களில் ஏற்படும் இயற்கை சீற்றம், மற்றும் ஆபத்துகளில் நம்மை மட்டும் காப்பாற்றிக் கொள்ளாமல் மற்றவர்களுக்கும் உள்ளுணர்வோடு இருந்து சக மனிதருக்கு எவ்வாறு நம் உதவ வேண்டும் எப்படி கையாள வேண்டும், உள்ளிட்ட முதலுதவி பயிற்சிகள் அளிப்பது என்பது குறித்து ஒத்திகைகளை பேரிடர் மீட்பு குழுவினர் தத்ரூபமாக நடத்தி காட்டினர்.
மேலும் மாணவர்களை இந்த ஒத்திகையில் ஈடுபடச் செய்து பயிற்சியில் ஈடுபடச் செய்தனர். பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சுரேஷ்குமார் உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்கள்இதில் கலந்து கொண்டனர்.
பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட இந்த பயிற்சி அவசியம் தேவையான ஒன்றாகும். இந்த பயிற்சியை பெறும் மாணவர்கள் ஆபத்து காலங்களில் செய்வதறியாது திகைத்து நிற்காமல் தன்னை காத்துக்கொள்வதோடு மற்றவர்களையும் காப்பாற்றுவதற்கான உணர்வினை பெறுவார்கள்.
பல பேரிடர் சம்பவங்களில் சரியான வழிகாட்டுதல் இன்றியே உயிரிழப்பு சம்பவங்கள் நடந்து விடுகிறது. எனவே தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களிலும் இதுபோன்ற பேரிடர் மீட்பு பயிற்சியை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும் என்பது கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கை ஆக உள்ளது.