தடுப்பணையில் குளித்த போது மாயமான தனியார் நிறுவன ஊழியர் சடலமாக மீட்பு

பொன்னேரி அருகே தடுப்பணையில் குளித்த போது மாயமான தனியார் நிறுவன ஊழியர் சடலமாக மீட்கப்பட்டார்.;

Update: 2023-01-10 05:50 GMT
பொன்னேரி அருகே தடுப்பணை நீரில் மூழ்கி இறந்த ராஜா.

மீஞ்சூர் அருகே கொசஸ்தலை ஆற்றின் தடுப்பணையில் குளித்த போது மாயமான தனியார் நிறுவன ஊழியர் சடலமாக மீட்கப்பட்டது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சென்னை முகப்பேரை சேர்ந்தவர் ராஜா (வயது30). இவர் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். விடுமுறை நாளில் தமது நண்பர்களுடன் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த கொசஸ்தலை ஆற்றில் மீஞ்சூர் அருகே உள்ள சீமாவரம் தடுப்பணையில் குளித்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென ராஜா ஆழமான பகுதிக்கு சென்றார். அவருக்கு நீச்சல்  தெரியாததால் நீரீல் மூழ்கினார். ராஜா நீரில் மூழ்கி மாயமானதால் அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் அவரை காப்பாற முயன்றனர். ஆனால் அவர்களுக்கும் நீச்சல் தெரியாததால் முயற்சியை கைவிட்டனர். பின்னர் உடனடியாக இதுபற்றி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் செங்குன்றம் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன்  தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் இவர நேரமாகி இருட்ட தொடங்கியது. இரவில் வெளிச்சம் குறைந்ததால் தேடும் பணி கைவிடப்பட்டது. இந் நிலையில் இன்று காலை கிராம இளைஞர்கள் மீண்டும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது  தடுப்பணையின் ஒரு பகுதியில் ராஜா உயிரற்ற நிலையில் காணப்பட்டார். அவரது உடலை மீட்டு தேடுதல் பணியில் ஈடு்பட்ட இளைஞர்கள் கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். இதனையடுத்து போலீசார் ராஜாவின் சடலத்தை உடற்கூறு ஆய்விற்காக  பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News