அனல்மின் நிலைய ஊழியர்கள் குடியிருப்பில் 8 வீடுகளில் பணம், நகை கொள்ளை
வடசென்னை அனல்மின் நிலைய ஊழியர்கள் குடியிருப்பில் அடுத்தடுத்த 8 வீடுகளில் பணம், நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர்.;
திருவள்ளூர் மாவட்டம், வல்லூரில் வடசென்னை அனல்மின் நிலைய ஊழியர்கள் குடியிருப்பு உள்ளது. இங்கு, நேற்று வேலைக்கும் மற்றும் வெளியூர் சென்றிருந்த ஊழியர்களின் வீடுகளை மர்மநபர்கள் நோட்டமிட்டுள்ளனர்.
பின்னர், நள்ளிரவில் அனல் மின்நிலைய தொழில்நுட்ப உதவி பொறியாளர் விக்னேஸ்வரன் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 20சவரன் நகை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதைத்தொடர்ந்து அடுத்தடுத்த 8 வீடுகளில் கொள்ளை போனதால் பாதிக்கப்பட்டவர்கள் மீஞ்சூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.