சோழவரத்தில் வாலிபர் கொலை: தொடர் கொலையால் பரபரப்பு

தொடர் கொலை குறித்து தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Update: 2022-08-10 07:00 GMT

சென்னை மாதவரம் சீதாபதி நகரினைச் சேர்ந்தவர் குணசேகரன் மகன் மதன்குமார்.இவர் ஆந்திராவில் இருந்து லாரிகளில் வீடு கட்டுவதற்கு கம்பிகளை கொண்டு வந்து சில்லறை முறையில் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

இந்த நிலையில் மதன்குமார் தொழில் நிமித்தமாக சென்னை சோழவரம் அடுத்த விஜயநல்லூர் பகுதியில் உள்ள பெட்ரோல் நிரப்பும் வங்கி அருகில் உள்ள தனது நண்பர்களை சந்தித்து அவர்களுடன் பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் திடீரென மதன்குமாரின் அலறல் சத்தம் கேட்கவே அவரது உதவியாளர் ஓடி சென்று சம்பவ இடத்தில் பார்த்தபோது மதன்குமார் கைகால் கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் நசுக்கி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டது அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

இதனைத் தொடர்ந்து சோழவரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தது அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மதன்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டாண்டி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதனைத் தொடர்ந்து அவரது உதவியாளர் விமல் குமாரிடம் விசாரணை மேற்கொண்ட போது நான்கு நபர்கள் அவரை கொலை செய்துவிட்டு தப்பிய போது பார்த்ததாகவும் தனக்கு வேறு ஏதும் தெரியாது என காவல்துறையிடம் அவர் தகவல் தெரிவித்தார்

கொலை செய்யப்பட்ட மதன்குமாருக்கு தொழில் போட்டியா அல்லது பெண்கள் தொடர்பான ஏதேனும் பிரச்னையா என்கின்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து சோழவரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ச்சியாக இதே பகுதியில் நேற்று முன்தினம் மற்றும் நேற்று இரவு கொலை நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.தொடர் கொலை குறித்து தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





Tags:    

Similar News