திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மிதமான மழை

திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது.

Update: 2022-01-17 10:30 GMT

பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழை. 

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டி வந்தது. இந்நிலையில் பொன்னேரி சுற்றுப்பகுதிகளில் சுமார் 30நிமிடத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்தது.

தொடர்ந்து மேகமூட்டத்துடன் விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வருவதால் வெயிலின் தாக்கமின்றி குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

தை மாதம் அறுவடைக்காக நெற்பயிர்கள் காத்திருக்கும் சூழலில் திடீர் மழையால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அதேபோல் திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, திருத்தணி உள்ளிட்ட இடங்களிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.

Tags:    

Similar News