பொன்னேரியில் 50ஆண்டு பழமையான தொடக்க பள்ளியை இடிக்க எம்.எல்.ஏ. உத்தரவு

பொன்னேரியில் 50ஆண்டு பழமையான தொடக்க பள்ளியை இடிக்க துரை சந்திரசேகர் எம்.எல்.ஏ. உத்தரவிட்டார்.

Update: 2022-03-02 03:30 GMT

பொன்னேரியில் பழமையான பள்ளியை சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் ஆய்வு செய்தார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த வேண்பாக்கம் பகுதியில் 50ஆண்டுகளபழமையான ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளி சிதிலமடைந்து அபாயகரமாக இருப்பதால் இழுத்து மூடப்பட்டு அருகில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த 2ஆண்டுகளாக தொடக்கப்பள்ளி மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் பாழடைந்த நிலையில் உள்ள பள்ளியை நேரில் ஆய்வு செய்தார். பள்ளி தலைமை ஆசிரியரிடம் பள்ளியில் படித்து வரும் மாணவர்களின் எண்ணிக்கை, வகுப்பறை தேவைகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது அங்கு வந்த பெற்றோர் 50ஆண்டு காலம் பழமையான பள்ளியை உடனே இடித்து புதிய கட்டிடம் கட்டி கொடுத்து மாணவர்கள் கல்வி தடைபடாமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்தனர்.

உடனடியாக தொலைபேசி மூலம் வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்பு கொண்ட சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் ஆபத்தான நிலையில் உள்ள பள்ளி கட்டிடத்தை இடித்து அகற்றுமாறு அறிவுறுத்தினார். பள்ளி கட்டிடம் விரைவில் இடிக்கப்பட்டு சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து புதிய வகுப்பறைகள் கட்டித்தருவதாக பெற்றோரிடம் அப்போது உறுதி அளித்தார்.

Tags:    

Similar News