கூட்டுறவு கடன் சங்க கட்டிடத்தை திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர்

Tiruvallur News - சின்னம்பேடு ஊராட்சியில் புதிய கூட்டுறவு கடன் சங்க கட்டிடத்தை பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் திறந்து வைத்தார்;

Update: 2022-06-02 04:15 GMT

பெரியபாளையம் அருகே சின்னம்பேடு ஊராட்சியில் புதிய கூட்டுறவு கடன் சங்க கட்டிடத்தை பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் திறந்து வைத்தார்

Tiruvallur News - பெரியபாளையம் அருகே சின்னம்பேடு ஊராட்சியில் புதிய கூட்டுறவு கடன் சங்க கட்டிடத்தை பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் திறந்து வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம் ஆரணி அடுத்த சின்னம்பேடு கிராமத்தில் ₹.23 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கூட்டுறவு கடன் சங்க கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கூட்டுறவு கடன் சங்க தலைவர் தனஞ்செழியன் தலைமையில் நடைபெற்றது..இதில் சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி எம்.எல்.ஏ துரை சந்திரசேகர் கலந்துகொண்டு புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்தை  குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்

இதில்,  சோழவரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் ராஜாத்தி செல்வசேகரன், ஒன்றிய கவுன்சிலர் சந்துரு, ஊராட்சி மன்றத்தலைவர் ஜான்சி ராஜா, துணைத் தலைவர் சேகர், கூட்டுறவு கலால் அலுவலர் இளையராஜா, மற்றும் இயக்குனர்கள் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பகலவன், மற்றும் முன்னாள் தலைவர்கள் பார்த்தசாரதி, கணேசன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர். அனைவரையும் கூட்டுறவு கடன் சங்க செயலர் கலைச்செல்வன் வரவேற்றார்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News