மீஞ்சூர் அருகே மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கிய எம்.எல்.ஏ.
மீஞ்சூர் அருகே மாணவ மாணவிகளுக்கு துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ.பரிசு வழங்கினார்;
சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ.
திருக்குறள் ஒப்புவித்த அரசு பள்ளி மாணவர்களுக்கு பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் பரிசுகளை வழங்கி பாராட்டினர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட. மீஞ்சூர் அருகே உள்ள வயலூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப் பள்ளியில் சுமார் 70.க்கும் மேற்பட்ட மாணவ மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரேமா தலைமை வகித்தார். வயலூர் ஊராட்சி மன்ற தலைவர் கோபி, ஒன்றிய குழு உறுப்பினர் மகாலட்சுமி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆண்டு விழாவில் பல்வேறு போட்டிகளான லெமன் ஸ்பூன், நடன போட்டி, மியூசிக்கல் சேர், திருக்குறள் ஒப்புவித்தல், பேச்சுப்போட்டி, கட்டுரைபோட்டி, ஓவியம் வரைதல் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரன் கலந்துகொண்டு மாணவர்களின் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கி அவர்களின் திறமையை பாராட்டி பேசினார். விழாவில்1330 திருக்குறள்களை பிழையின்றி ஒப்புவித்த 35.மாணவ மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ்களை சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரன் வழங்கினார்.
இதில் மீஞ்சூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் ரவி, வட்டார கல்வி அலுவலர் கௌரி, நளினி, பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் பாண்டியராஜன், மகேந்திரன், மற்றும் நந்தகோபால், லோகநாதன், மாணவர்களின் பெற்றோர்கள் பொதுமக்கள் என அப்பகுதியை சேர்ந்த அனைத்து கட்சி பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.