பொன்னேரியில் அடுத்தடுத்து இரண்டு வீடுகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை

பொன்னேரியில் அடுத்தடுத்து இரண்டு வீடுகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.;

Update: 2023-05-13 02:00 GMT

கொள்ளையடிக்கப்பட்ட வீடுகள்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் அடுத்தடுத்தது இரண்டு வீடுகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். சங்கர் நகர் பகுதியில் வசித்து வரும் தனியார் நிறுவன ஊழியரான விஜயசாரதி கோடை விடுமுறையில் தமது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தார்.

இந்நிலையில் காலை இவரது வீட்டின் பக்கத்து வீடு வெளிப்புறமாக தாழிடப்பட்ட நிலையில் அக்கம்பத்தினர் உதவியோடு கதவை திறந்து வெளியே வந்து பார்த்தபோது விஜயசாரதியின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த பொருட்கள் கொள்ளை போனது தெரிய வந்தது.

இதே போல அருகில் உள்ள பரந்தாமன் என்பவரது வீட்டின் பூட்டும் உடைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த வீட்டின் பீரோவில் இருந்தும் மர்ம நபர்கள் பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து அளிக்கப்பட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொன்னேரி போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இரண்டு வீடுகளின் உரிமையாளார்களும் வெளியூர் சென்றுள்ள நிலையில் அவர்கள் திரும்பி வந்த பின்னரே கொள்ளை போன பொருட்களின் முழு விவரம் தெரிய வரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News