Ministers Issued Relief Things பழவேற்காடு மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர்கள் வழங்கல்
Ministers Issued Relief Things பழவேற்காட்டில் வாழ்வாதாரம் இழந்த மீனவர்களுக்கு நிவாரண நலத்திட்டங்களை அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன் மூர்த்தி ஆகியோர் வழங்கினர்.;
பழவேற்காடு பகுதி மீனவர்களுக்கான நலத்திட்ட நிவாரண உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.
Ministers Issued Relief Things
புயலால் சேதமடைந்த படகுகள், வலைகள் குறித்து கணக்கெடுக்கும் பணிகள் சனிக்கிழமை முடிவடையும். முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு நிவாரணம் குறித்து அறிவிக்கப்படும். பொன்னேரியில் மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய மீன்வளத்துறை அமைச்சர் பேட்டி. அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை. பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பேட்டியளித்தார்.
அண்மையில் உருவான மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு மீனவ கிராமங்களில் மழைநீர் சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தியது. மேலும் புயல் காற்றில் படகுகள், வலைகள் உள்ளிட்டவை சேதமடைந்தன. இவற்றை கணக்கிடும் பணியில் மீன்வளத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பழவேற்காட்டில் புயல், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீனவ மக்களிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறியுமாறு முதலமைச்சர் அறிவுறுத்தியதன் பேரின் பழவேற்காட்டில் புயலால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து கணக்கிடும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார். 53மீனவ கிராமங்களிலும் மீன்வளத்துறை அதிகாரிகள் சென்று கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
எண்ணூரில் எண்ணெய் கசிவு தொடர்பாக துறை அமைச்சரும் ஆய்வு செய்வார்கள் எனவும், அது தொடர்பாக முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார் என தெரிவித்தார். புயலால் சேதமடைந்த படகுகள், வலைகள் குறித்து கணக்கெடுக்கும் பணிகள் சனிக்கிழமை முடிவடையும் எனவும், இது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நிவாரணம் குறித்து அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.
மிக்ஜாம் புயலையொட்டி தமிழ்நாடு அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு உயிரிழப்பும் ஏற்படவில்லை என பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், சட்டமன்ற உறுப்பினர்கள் கோவிந்தராஜன், துரை சந்திரசேகர், ஆகியோர் உடன் இருந்தனர்.