சோழவரம்; எம்ஜிஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டம்
சோழவரம் அருகே அதிமுக சார்பில் எம் ஜி ஆரின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.;
எம் ஜி ஆரின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அடுத்த அருமந்தையில் அதிமுக சார்பில் எம் ஜி ஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட சிறுணியம் பலராமன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில மாணவரணி செயலாளர் எஸ்.ஆர்.விஜயகுமார் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட புயலின் போது சென்னையில் 15 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலங்களுக்கும் ஒரு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஒதுக்கப்பட்டு பணிகள் சிறப்பாக செயல்பட்டதாகவும், ஆனால் தற்போது இந்த நிர்வாக திறனற்ற அரசின் காரணத்தால் மழை வெள்ளம் வடிய பல நாட்கள் ஆனதாக குற்றம் சாட்டினார்.
மேலும் காங்கிரசும் திமுக இணைந்து நீட்டை கொண்டு வந்து தற்போது நீட்டை எதிர்ப்பதாக நாடகமாடி வருவதாகவும், ஆனால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசில் அரசு பள்ளி மாணவர் கூட மருத்துவம் பயில 7.5சதவீதம் இட ஒதுக்கீடு கொண்டு வந்து அதன் மூலம் தற்போது பல அரசு பள்ளி மாணவர்கள் எளிதாக மருத்துவம் படிக்க முடிந்ததாகவும் தெரிவித்தார்.
இறுதியில் நலிவுற்ற பெண்களுக்கு தையல் இயந்திரங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர மிதிவண்டி, இஸ்திரி பெட்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.