ஆரணியில் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர்

ஆரணி துணை சுகாதார நிலையத்தில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தினை துரை சந்திரசேகர் எம்எல்ஏ வழங்கினார்.

Update: 2024-03-03 11:13 GMT

பெரியபாளையம் அருகே ஆரணி பகுதியில் அரசு துணை சுகாதார நிலையத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தினை பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரைசந்திரசேகர் வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

தமிழகம் முழுவதும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த ஆரணி அரசு துணை சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் பொறுப்பு மருத்துவ அலுவலர் திலக், வட்டார மருத்துவ மேற்பார்வையாளர் ஜெகன்நாதனலு ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும் திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவருமான துரை.சந்திரசேகர் கலந்து கொண்டு ஆரணி பேரூராட்சிக்குட்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்தினை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஆரணி பேரூராட்சி காங்கிரஸ் துணைத் தலைவர் சுகுமார்,ஆரணி திமுக செயலாளர் முத்து,பொருளாளர், கரிகாலலன்,வார்டு கவுன்சிலர்கள் நிலவழகன், ரகுமான்கான்,மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News