அத்திப்பட்டு வைகுண்ட பெருமாள் ஆலயத்தின் மண்டல பூஜை நிறைவு

பொன்னேரி அடுத்த அத்திப்பட்டில் உள்ள வைகுண்ட பெருமாள் ஆலயத்தின் 48வது நாள் மண்டல அபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Update: 2024-08-24 09:45 GMT

அத்திப்பட்டு வைகுண்ட பெருமாள் ஆலயத்தின் மண்டல பூஜை நிறைவு விழாவில் திரளாக பங்கேற்ற பக்தர்கள் (முதல் படம்) சுவாமி  சிறப்பு அலங்காரம். 

அத்திப்பட்டில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத வைகுண்ட பெருமாள் ஆலயத்தில் 48 வது நாள் மண்டல பூஜை நிறைவு பெற்று எம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி மீஞ்சூர் ஒன்றியம் அத்திப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஸ்ரீ வைகுண்ட பெருமாள் ஆலயம் அண்மையில் புனரமைக்கப்பட்டு கடந்த மாதம் 7.ம் தேதி கும்பாபிஷேகம் விழா விமர்சையாக நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து 48 ஆம் நாள் இன்று மண்டல பூஜைகள் முடிவடைந்து எம்பெருமானுக்கு அதிகாலை சிறப்பு அபிஷேகங்கள் ஆன பால், தயிர், சந்தனம், இளநீர், ஜவ்வாது, தேன், பன்னீர், திருநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்களாலும், திரு ஆபரணங்களாலும் அலங்காரம் செய்து தீப தூப,ஆராதனை காண்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேல், துணைத்தலைவர் எம்.டி. ஜி.கதிர்வேல், ஆலய நிர்வாகிகள் எம்.டி.ஜி. சேகர் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள், விழாக் குழுவினர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

Similar News