பெண்ணிடம் பாலியல் சீண்டல்: இளைஞர் கைது.
திருவள்ளூர் மாவட்டம் சோத்து பெரும்பேடு கிராமத்தில் நடந்து சென்ற இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் கைது;
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோத்து பெரும்பேடு கிராமத்தைச் சேர்ந்த 27 வயது பெண் அங்குள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்கிறார். கடந்த 23.4.2021 அன்று வேலை முடிந்து இரவு 7 மணியளவில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த வினோத் என்ற இளைஞர் அந்தப் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து அந்தப் பெண் கூச்சலிடவே, அவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
இதுகுறித்து அந்த பெண் சோழவரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வினோத் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.