பொன்னேரி நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு நடைமுறைக்கு கொண்டு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் பொன்னேரி நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-07-01 09:00 GMT

பொன்னேரி நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

பொன்னேரியில் மத்திய அரசு நடைமுறைக்கு கொண்டு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள், நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மத்திய அரசு இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றில் மாற்றங்கள் செய்து புதிதாக பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்க்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷயா அதிநயம் என கொண்டு வந்துள்ளது. இந்த புதிய சட்டங்கள் நாடு முழுவதும் இன்று ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. மத்திய அரசின் இந்த புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் இன்று வழக்கறிஞர்கள் கருப்பு நாளாக அனுசரித்து வருகின்றனர்.

மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றங்கள் என 6நீதிமன்றங்களிலும் 500ககும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பொன்னேரி சார்பு நீதிமன்ற வாயிலில் வழக்கறிஞர்கள் ஒன்று கூடி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு மறைமுகமாக சம்ஸ்கிருத திணிப்பில் ஈடுபடுவதாகவும், இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டங்களை திரும்ப பெறும் வரை வழக்கறிஞர்கள் போராட்டம் ஓயாது என தெரிவித்தனர்.

Similar News