குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி பொன்னேரியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2024-03-13 11:17 GMT

பொன்னேரியில் ஆர்ப்பாட்டம் நடத்திய வழக்கறிஞர்கள்.

பொன்னேரியில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மதரீதியாக மக்களை பிளவுபடுத்துவதாகவும், இந்திய ஒற்றுமையை சீர்குலைப்பதாகவும் குற்றச்சாட்டினர்.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஒன்றிய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை உடனடியாக அமல்படுத்துவதாக அறிவித்தது இதற்கு நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு அரசியல் கட்சியினர் பல தரப்பினரும் கண்டனங்களை தெரிவிப்பதோடு ஒன்றிய அரசுக்கு எதிராக போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் சார்பு நீதிமன்றம் எதிரே வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


அப்போது மதரீதியாக மக்களை பிளவுபடுத்துவதாகவும், இந்திய ஒற்றுமையை சீருகுலைப்பதாகவும் குற்றம் சாட்டி ஒன்றிய பாஜக அரசை கண்டித்து கண்டனம் முழக்கங்களை எழுப்பினர். நாட்டின் பன்முகத் தன்மையும் வேற்றுமையில் ஒற்றுமை என்பதையும் பாஜக பிளவு படுத்தி சிறுபான்மை மக்களை வஞ்சிப்பதாக வழக்கறிஞர் சங்கத்தினர் குற்றம் சாட்டினர். ஒன்றிய பாஜக அரசு தற்போது அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது. ஒன்றிய அரசின் மக்கள் விரோத சட்டம் குறித்து பொது மேடைகளில் மக்களிடம் எடுத்து செல்லப்படும் எனவும் அப்போது தெரிவித்தனர்.

Tags:    

Similar News