சென்னை அருகே பெண் காவல் ஆய்வாளர் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை
சென்னை அருகே பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் ஆளில்லாத நேரத்தில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் தங்க நகைகளை திருடி சென்றனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.;
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த மீஞ்சூர் பகுதியில் பெண் ஆய்வாளரின் வீட்டின் பூட்டை உடைத்து, 5 சவரன் நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை உயர் நீதிமன்ற வளாக காவல்நிலைய ஆய்வாளராக பணியாற்றி வருபவர் பிரேமா. இவர், தனது குடும்பத்துடன் மீஞ்சூர் அருகே உள்ள அண்ணாநகரில் வசித்து வருகிறார். இவரது கணவர் கணேசன் (45), மீஞ்சூர் அருகே வல்லூர் பகுதியில் உள்ள அனல் மின்நிலையத்தில் பணியாற்றி வருகிறார். .
வழக்கம் போல் வேலைக்கு சென்ற கணேசன், மாலை திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார் . உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த 5 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து மீஞ்சூர் காவல் நிலையத்தில் கணேசன் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .காவல் ஆய்வாளர் வீட்டில் பூட்டை உடைத்து நகை கொள்ள போனது அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது