கும்மனூர் கிராமத்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
கும்மனூர் கிராமத்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த கும்மனூர் கிராமத்தில் வசிப்பவர் அசோக் என்பவரின் சகோதரன் ஆகாஷ். இவர்களின் தாய் ஏன் வேலைக்கு போகவில்லை என கேட்டதற்கு ஆகாஷ் கோபித்துக் கொண்டு பக்கத்து தெருவில் உள்ள தாய்மாமன் ஞானமுத்து வீட்டுக்கு சென்றுள்ளார்.
பின்பு அங்கு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்