மீஞ்சூர் அத்திப்பட்டு புதுநகர் ஸ்ரீதேவி நாகாத்தம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகம்

மஹா கும்பாபிஷேகம் செய்து தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது

Update: 2022-02-08 01:45 GMT

மீஞ்சூர் அத்திப்பட்டு புதுநகர் ஸ்ரீதேவி நாகாத்தம்மன் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம் விழாவில் பங்கேற்ற பக்தர்கள்

மீஞ்சூர் அத்திப்பட்டு புதுநகர் ஸ்ரீதேவி நாகாத்தம்மன் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம் விழா

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அத்திப்பட்டு புதுநகர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீதேவி நாகாத்தம்மன் ஆலயத்தில் நூதன ஜீர்னோத்தாரண புனராவர்த்தன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா நடை பெற்றது. நிகழ்ச்சியில், தண்டபாணி சிவாச்சாரியார், கார்த்திக் சிவம், பாலாஜி ஆச்சாரியர் ஆகிய சர்வசாதக குழுவினர்களால் விக்னேஷ்வரபூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், கரிக்கோலம், வாஸ்துசாந்தி, பிரவேசபலி, அங்குரர்பனம், கும்பலங்காரம், முதல் இரண்டு கால யாகபூஜைகள் நடை பெற்றது.

பின்னர் மேளதாளத்துடன் கடம் புறப்பட்டு ஸ்ரீதேவி நாகாத்தம்மன் மற்றும் அரசடிமுனீஸ்வரர், ஆறுமுகசுவாமி, சிவநாகர், மூலஸ்தானநாகர்கள் போன்ற தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் செய்து தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.இதனைத்தொடர்ந்து பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.

இவ்விழாவில் அத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் எம்.டி.ஜி.சுகந்திவடிவேல், துணைத்தலைவர் எம்.டி.ஜி.கதிர்வேல், ஆன்மீக சிந்தனையாளர் எம்.டி.ஜி.சேகர், வார்டு உறுப்பினர்கள் சுமதிசங்கர், நிவ்தாபிரகாஷ், அருண்ஜோதி உள்ளிட்ட ஆலய நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். முடிவில் ஆலயம் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.



Tags:    

Similar News