ஸ்ரீ ராதா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம்

பெரியபாளையம் அருகே ஸ்ரீ ராதா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-09-15 04:00 GMT

கோபுர கலசத்தின் மீது பட்டாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி, சோழவரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே சின்னம்பேடு சிறுவாபுரி மேல் தெரு பகுதியில் சுமார் 100.ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ராதா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி திருக்கோவில் உள்ளது. இப்போதலில் கும்பாபிஷேகம் கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்றது.இதனை தொடர்ந்து திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் விழா இன்று காலை வெகு விமர்சையாக நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு சந்தானம் பட்டாச்சாரியார் தலைமையில் கொண்ட குழுவினர் கடந்த 13.ஆம் தேதி ஆலய வளாகத்தில் அக்னி குண்டம் அமைத்து பகவரா தானம், புண்யாஹ வசனம், அங்கு ராற்பணம், அக்னி பிரதிஷ்டை, கும்ப தேவா ஆராதனம், உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது.

தொடர்ந்து 14.ஆம் தேதி அக்னி பாராயணம், ஹோமம், கோ பூஜை, மஹா பூர்ணா ஹூதி, உள்ளிட்ட மூன்று கால பூஜை நடந்த முடிந்த பின் யாகசாலையில்.பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டு புனித நீர் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியர்கள் தலையில் சுமந்து மேல தாளங்கள் முழங்க கோவில் சுற்றி வளம் வந்து பின்னர் ஆலயத்தின் கோபுரம் மீதுள்ள கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர்.

அங்கு வந்திருந்த திரளான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்னர் மூலவருக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வண்ண மலர்களால் அலங்காரம் செய்து மகா தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதான பிரசாதங்களும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா குழுவைச் சேர்ந்த பார்த்தசாரதி, மனோகரன், புருஷோத்தமன்,கேசவன், சுப்பிரமணி,சீனிவாசன், ராஜா,தேவராஜி,வேலு, சண்முகம் மற்றும் கிராம பொதுமக்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

இரவு 7மணி அளவில் ஸ்ரீ ராதா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி வாழ வேடிக்கையுடன் முக்கிய வீதிகளில் திமிதி விழாவ வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Tags:    

Similar News