பெரியபாளையம் அருகே ஸ்ரீராமலிங்க சாமுண்டேஸ்வரி கோவில் கும்பாபிஷேக விழா

பெரியபாளையம் அருகே ஆரணி ஸ்ரீராமலிங்க சாமுண்டேஸ்வரி கோவில் கும்பாபிஷேக விழா மிக சிறப்பாக நடைபெற்றது.;

Update: 2023-05-24 09:26 GMT
பெரியபாளையம் அருகே ஸ்ரீராமலிங்க சாமுண்டேஸ்வரி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.

பெரியபாளையம் அருகே ஆரணி ஸ்ரீராமலிங்க சாமுண்டேஸ்வரி திருக்கோவிலில் 18 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று காலை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி, சோழவரம் ஒன்றியம்,ஆரணி பஜார் வீதியில் புகழ்பெற்ற ஸ்ரீ ராமலிங்க சாமுண்டேஸ்வரி திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் சாமுண்டேஸ்வரி அம்மனுக்கு எதிரும்,வள்ளி,தெய்வானை,சுப்ரமணிய சுவாமிக்கு எதிரும் என ஒரு கோவிலுக்குள் இரண்டு கொடி மரங்கள் உள்ளது என்பதே சிறப்பு ஆகும்.பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலின் கோபுரங்கள் மற்றும் வாகனங்கள் பழுது பார்த்து வர்ணம் பூசி திருப்பணிகள் நடைபெற்றது.18 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் கோவிலுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.இக்கோவிலில் 85 ஆண்டுகளுக்குப் பின்னர் சாமுண்டேஸ்வரி அம்மனுக்கு எதிரும்,55 ஆண்டுகளுக்குப் பின்னர் வள்ளி,தெய்வானை,சுப்ரமணிய சுவாமிக்கு எதிரும் என மொத்தம் இரண்டு புதிய கொடி மரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.இன்று காலை ஏழு மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதை முன்னிட்டு திங்கட்கிழமை காலை முதல் கணபதி பூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகளுடன் மகா கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் துவங்கியது.இன்று காலை மகா பூர்ணாகுதி முடிவுற்று புனித நீர் அடங்கிய கலசங்கள் திருக்கோவிலின் அர்ச்சகர்கள் சுப்ரமணிய குருக்கள்,நடராஜ குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக கொண்டு சென்று ராஜகோபுரம், விமானங்களுக்கும்,பரிவார மூர்த்திகள்,மூலவர் உள்ளிட்டவைகளுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்தனர்.

அங்கு வந்திருந்த திரளான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதான பிரசாதங்களும் வழங்கப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு கோவில் வளாகம் முழுவதும் கண்ணைக் கவரும் வகையில் வண்ண விளக்குகளாலும்,கொடி தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை  விழா குழுவினர்களும்,கிராம பொதுமக்களும்,பக்தர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

நாளை மாலை பஞ்ச மூர்த்திகளுடன் ஸ்ரீ ராமலிங்க சாமுண்டேஸ்வரி தேவி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.நாளை முதல் தொடர்ந்து 48 நாட்கள் மண்டல அபிஷேக விழா நடைபெறுகிறது.

Tags:    

Similar News