ஒடிசாவில் 'பதுங்கிய' கொலையாளி; 8 ஆண்டுகளுக்கு பின் கைது
8 ஆண்டுகளுக்கு முன், மீஞ்சூரில் கொலை செய்துவிட்டு, ஒடிசாவில் பதுங்கிய கொலையாளியை, தமிழக போலீசார் ஒடிசா சென்று கைது செய்தனர்.;
எட்டு ஆண்டுகளுக்கு பின், போலீசாரிடம் சிக்கிய கொலையாளி.
மீஞ்சூர் அருகே, கடந்த 2014ம் ஆண்டு பெயின்டிங் கான்ட்ராக்டர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 8 ஆண்டுகளுக்கு பின், ஒடிசா சென்ற போலீசார், கொலையாளியை கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளியில் உள்ள தனியார் நிறுவனத்தில், குஜராத்தை சேர்ந்த லிட்டன்குமார் தினேஷ்பாய் பிஸ்வாஸ் (42) என்பவர் பெயின்டிங் கான்ட்ராக்டராக பணி செய்தார். இவர் அத்திப்பட்டில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார். இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டு முகம், தலை சிதைக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் குறித்து, வழக்குப்பதிவு செய்த மீஞ்சூர் போலீசார், கொலை செய்யப்பட்ட நபருடன் தங்கி பணியாற்றிய பாபுலா மொகந்தி என்பவரை, தேடி வந்தனர். 8 ஆண்டுகளாக, கொலையாளி தலைமறைவாக இருந்த நிலையில், மீஞ்சூர் போலீசார் ஒடிசாவில் பதுங்கி இருந்த கொலையாளி பாபுலா மொகந்தியை (50) கைது செய்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் சிறையில் அடைத்தனர்..