சோழவரம் அருகே கல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

சோழவரம் அருகே கல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-06-17 11:45 GMT

சோழவரம் அருகே கல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.

சோழவரம் அருகே பழமையான ஸ்ரீ கல்யாண வெங்கடேச பெருமாள் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அடுத்த ஆத்தூர் கிராமத்தில் அலர்மேலு மங்கா சமேத ஸ்ரீ கல்யாண வெங்கடேச பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது.இக்கோவில் புதுப்பிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று காலை மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. யாகசாலையில் 3 கால பூஜையுடன் தொடங்கப்பட்ட கும்பாபிஷேக விழாவில் வாஸ்து சாந்தி, காப்புக்கட்டுதல், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது.


இதனை தொடர்ந்து மேளதாளம் முழங்க ஆச்சாரியர்கள் கலசங்களை தலையில் சுமந்து கோவில் சுற்றி வலம் வந்து பக்தர்கள் புடைசூழ கோபுர கலசத்திற்கு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோஷமிட்டு பெருமாளை வணங்கினார்கள்.

இதனை தொடர்ந்து கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. பின்னர் மூலவருக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், ஜவ்வாது, தேன், பன்னீர், திருநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு. வண்ண மலர்களாலும், திரு ஆபரணங்களாலும் அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இவ்விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர் பின்னர் பக்தர்களுக்கு ஆலயத்தின் சார்பில் அன்னதான பிரசாதங்களும் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News