அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் அங்கன்வாடி மற்றும் பள்ளி கட்டிடம் திறப்பு

அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் அங்கன்வாடி மற்றும் புதிய பள்ளி கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.

Update: 2023-07-08 09:31 GMT

அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் புதிய பள்ளி கட்டிடம் மற்றும் அங்கன்வாடி மையம் திறந்து வைக்கப்பட்டது.

சோழவரம் ஒன்றியம் அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில். அங்கன்வாடி மற்றும் பள்ளி கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி சோழவரம் ஒன்றியம் அழிஞ்சிவாக்கம் முதல் நிலை ஊராட்சியில் 2020 -2021 ம் ஆண்டிற்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதி திட்டத்தின் கீழ் சுமார் ரூ. 22 .65 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற கட்டிடம் அண்ணா மறுமலர்ச்சி உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 11.78 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் கட்டிடம் மற்றும் பள்ளி கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அழிஞ்சிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் நந்தினி ரமேஷ் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வரவேற்பு அளித்தார். சோழவரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் ராஜாத்தி செல்வசேகரன் தலைமை தாங்கினார்.

ஊராட்சி மன்ற கட்டிடம் மற்றும் அங்கன்வாடி மைய கட்டிடத்தை பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் துரை சந்திரசேகர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில் சோழவரம் ஐந்தாவது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பிரகாஷ் ,வட்டார வளர்ச்சி அலுவலர் ராமகிருஷ்ணன், உதவி பொறியாளர் ஜெய்சங்கர்,ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜானகிராமன், வார்டு உறுப்பினர்கள் சந்தோஷ் குமார், ரமணி சீனிவாசன், உமா மகேஸ்வரி செலமையா, உஷா அசோக் குமார், சுபாஷினி சதீஷ் பாபு, தயாளன், முரளி, மற்றும் ஊராட்சி செயலாளர் குமார், முத்துக்குமார், திமுக நிர்வாகிகள் மாவட்ட அவைத்தலைவர் மு.பகலவன்,எல்லாபுரம் ஒன்றிய செயலாளர் சக்திவேல்,ஒன்றிய அவைத்தலைவர் சிறுவபுரி சி.ஜே.ரமேஷ், ஆரணி பேரூராட்சி துணைத் தலைவர் காங்கிரஸ் சுகுமார்,ஒன்றிய கவுன்சிலர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆசிரியர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News