சிறுவாபுரி முருகன் கோவிலில் பக்தர்களின் உண்டியல் காணிக்கை ரூ.48 லட்சம்

சிறுவாபுரி முருகன் கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூ.48 லட்சம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-09-28 13:17 GMT

சிறுவாபுரி முருகன் கோவிலில் உண்டியல் திறக்கப்பட்டு பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் எண்ணப்பட்டது.

சிறுவாபுரி முருகன் கோவிலில் கடந்த 2 மாதங்களில்  48லட்சத்து 62ஆயிரத்து 109 ரூபாயும், தங்கம் 54கிராமும், வெள்ளி 4கிலோ ஆகியவை உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியுள்ளதாக கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்து உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி, பெரியபாளையம் அடுத்த சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. 6வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும். அரசியலில் புகழ் பெறலாம், ரியல் எஸ்டேட், வீடு கட்டுதல் ஆகியவை உடனடியாக நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

குழந்தைக்காக ஆலயத்தின் பின்புறம் உள்ள வேப்ப மரத்தில் பெண்கள் தொட்டியில் கட்டி வழிபாடு செய்வதால் வேண்டுதல் நிறைவேறும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. இந்த கோவிலுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், பெரியபாளையம், ஊத்துக்கோட்டை, ஆரணி, பொன்னேரி, உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வர தொடங்கிவிட்டனர்.

குறிப்பாக செவ்வாய்க்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும். இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு பிறகு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணம் எண்ணும் பணி ஆலய வளாகத்தில்  நடைபெற்றது. திருக்கோயில் பணியாளர்கள், பொதுமக்கள் என திரளானோர் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ 48லட்சத்து 62ஆயிரத்து 109ரூபாயும், தங்கம் 54கிராமும், வெள்ளி 4 கிலோ காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்படுள்ளது.

Tags:    

Similar News