விலை நிலங்கள் ஆற்றில் இரவு நேரத்தில் சட்ட விரோதமாக மணல் கொள்ளை

Robbery Case - விவசாயிகளுக்கு சொந்தமான பட்டா விளை நிலங்களில் விவசாயிகளுக்கு தெரியாமல் கடந்த 1 ஆண்டுக்கு மேலாக தொடர் மணல் கொள்ளை நடைபெற்று வருகின்றது.;

Update: 2022-08-13 01:45 GMT

பைல் படம்.

Robbery Case - திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் திருநிலை, முள்ளவாயில், சின்னமுள்ள வாயில் உள்ளிட்ட பல கிராமங்களில், விவசாயிகளுக்கு சொந்தமான பட்டா விளை நிலங்களில் விவசாயிகளுக்கு தெரியாமல் கடந்த 1 ஆண்டுக்கு மேலாக தொடர்ந்து மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு சொந்தமாக பட்டா விளை நிலங்கள் விவசாய பணிகளுக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மணல் கொள்ளை குறித்து பலமுறை அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை, போலீசாரிடம் பாதிக்கட்டுள்ள விவசாயிகள் நேரில் பலமுறை புகார் செய்தும், இதுவரை மணல் கொள்ளையை தடுக்க அதிகாரிகள் தயக்கம் காட்டி வருவதாக குற்றம் சாட்டப்பட்டடுள்ளது.

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: தாங்கள் பகுதியில் மணல் கொள்ளையை தடுக்க வேண்டிய அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர். இதனால் இரவு நேரங்களில் விவசாயிகள் தங்களது விளைநிலங்கள், தரிசு நிலங்களை கூட காவல் காக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இப்பகுதியில் விளைநிலங்களில் மணல் திருடப்படுவதால், விவசாய நிலங்களில் உள்ள போர்வெல்களில் நீரூற்றுக்கள் குறைந்து, நீர் ஆதார அமைப்பு பாதாளத்திற்கு சென்றுள்ளது. தற்போது குடிநீரின்றி பரிதவித்து வருகிறோம். இது மட்டுமல்லாமல் இப்பகுதியில் செல்லும் கொசுத்தலை ஆற்றில் மணல் கடத்தி வருகின்றனர். இதனை சம்பந்தப்பட்ட காவல்துறையினர் கண்டு கொள்வதில்லை.

அதிகாரிகள் துணையோடு தான் மணல் கொள்ளை அமோகமாக நடந்து வருகிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே விவசாயிகளின் நலன் கருதி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்,அனுமதியின்றி மணல் எடுப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் கொள்ளையை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுத்து விலை நிலங்களை காப்பாற்ற வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News