மீஞ்சூர் காயிதே மில்லத் அறக்கட்டளை சார்பில் இப்தார் நோன்பு விழா
மீஞ்சூர் காயிதே மில்லத் அறக்கட்டளை சார்பில், இப்தார் நோன்பு திறக்கும் விழா நடைபெற்றது.;
மீஞ்சூர் காயிதே மில்லத் அறக்கட்டளை மூலமாக, இப்தார் நோன்பு திறக்கும் விழா நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மீஞ்சூரில் காயிதே மில்லத் அறக்கட்டளை மூலமாக இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ரம்ஜான் மாதத்தை ஒட்டி இஸ்லாமியர்கள் புனித நோன்பு இருக்கும் நாள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று காயிதே மில்லத் அவர்களின் நினைவாக அறக்கட்டளை ஒன்று தொடக்கப்பட்டு அதன் மூலம் பல நல்ல செயல்களை இங்குள்ள இஸ்லாமியர்கள் செய்து வருகின்றனர். அதன் அடிப்படையில் இன்று புனித நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மத நல்லிணக்கத்தோடு நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், விடுதலை சிறுத்தை திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் அறம் திரைப்பட இயக்குனர் கோபி நயினார், மீஞ்சூர் முன்னாள் திமுக நகர செயலாளர் மோகன்ராஜ், வியாபாரிகள் சங்க சார்ந்த சார்ந்த ஷேக் அகமது, ராமமூர்த்தி, பேரூராட்சி கவுன்சிலர் அபூபக்கர், அனிஃபா, சையத் அலி, அக்பர், சுரேஷ், முகமத் அலி, ராஜேந்திரன், மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு ரம்ஜான் நோன்பு திறக்கும் நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.