மீஞ்சூரில் பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 13 சவரன் நகை கொள்ளை

House Theft Police Enquiry மீஞ்சூரில் பட்டப் பகலில் ஆசிரியை வீட்டில் கதவை உடைத்து 13 சவரன் தங்க நகை கொள்ளை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;

Update: 2024-02-24 02:45 GMT

(கோப்பு படம்)

House Theft Police Enquiry

மீஞ்சூரில் பட்டப்பகலில் அரசு பள்ளி ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 13 சவரன் நகைகள் கொள்ளை. பட்டப்பகலில் நடந்த கொள்ளை சம்பவத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். .

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த மீஞ்சூர் காமதேனு நகரை சேர்ந்தவர் லட்சுமி கலா இவர் அரசுப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் வடிவேல்முருகன் அரசு சட்டக்கல்லூரியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர்களது குழந்தைகள் பள்ளி, கல்லூரிக்கு சென்ற நிலையில் இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். பள்ளியில் இருந்து மாலையில் லட்சுமிகலா வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 13,சவரன் தங்க நகைகள் கொள்ளை போனது தெரிய வந்தது. இது குறித்து அளிக்கப்பட தகவலின் பேரில் மீஞ்சூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இது குறித்து வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ள பதிவுகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசுப்பள்ளி ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து பட்டப்பகலில் நடந்த கொள்ளை சம்பவம் காரணமாக அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Tags:    

Similar News