பொன்னேரி அருகே குடும்ப அட்டைகளுக்கான குறை தீர்க்கும் சிறப்புமுகாம்

பொன்னேரி அருகே குடும்ப அட்டைகளுக்கான குறை தீர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.;

Update: 2023-07-09 13:00 GMT

பொன்னேரி அருகே குடும்ப அட்டைகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.

பொன்னேரி அருகே நந்தியம்பாக்கம் ஊராட்சியில் குடும்ப அட்டைகளுக்கான சிறப்பு  குறை தீர்க்கும்  சிறப்பு முகாம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய நந்தியம்பாக்கம் ஊராட்சியில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் குடும்ப அட்டை குறை தீர்வு சிறப்பு முகாம் கிராம நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்றது. இம்முகாமிற்கு பொன்னேரி வட்ட வழங்கல் அலுவலர் ஜெய்கர் தலைமையில், நந்தியம்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் முன்னிலையில் முகாம் நடைபெற்றது.

முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல்,பெயர் நீக்கல், கடை எண் மாற்றம், பதிவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு பொதுமக்களின் கோரிக்கை மனுக்களின் மீது உடனடி தீர்வு காணப்பட்டு வழங்கப்பட்டது.இதில் திரளான கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

குடும்ப அட்டைகள் ஒவ்வொருவரின் அன்றாட வாழ்க்கையிலும் ஒரு முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது. என இதுபோன்ற குறைதீர்க்கும் முகாம்களை அடிக்கடி நடத்தினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News