வெங்கல் கிராமத்தில் கணவன் இறந்ததால் மன உளைச்சலில் இருந்த மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் வெங்கல் ஊராட்சியில் உள்ள அண்ணா தெருவில் வசித்து வந்தவர் மணி (65). இந்த முதியவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உடல்நிலை பாதிக்கப்பட்டு பலியானார்.
இந்நிலையில் இவரது மனைவி தமிழ்ச்செல்வி (60) என்ற மூதாட்டி கணவன் இறந்ததால் மன வருத்தத்துடன் காணப்பட்டார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தற்கொலை செய்து கொண்டார்.
அப்போது வெளியே சென்றிருந்த மகன் செந்தில் வேலன் (35) வீட்டிற்குள் வந்தவர் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து தமிழ்ச்செல்வியை மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். ஆனால் மூதாட்டி தமிழ்ச்செல்வியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வழியிலேயே இறந்துவிட்டார் என்று கூறிவிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து வெங்கல் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேல் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.