மாமூல் கேட்டு கத்தி வெட்டு! பணம் பறித்து சென்றவர்கள் கைது!

பொன்னேரி அருகே மல்லிகை கடையில் மாமூல் கேட்டு கடைக்குள் புகுந்து கடைக்காரரை வெட்டி பணம் பறித்துச் சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-06-07 10:30 GMT

பொன்னேரி அருகே பட்டப்பகலில் மாமூல் கேட்டு கடைக்குள் புகுந்து கடை உரிமையாளரை பட்டா கத்தியால் வெட்டி பணம் பறித்த இருவர் கைது. போலீசிடம் இருந்து தப்ப முயன்ற போது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருவருக்கு மாவு கட்டு.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் பகுதியில் சூர்யா ( வயது 23) என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார்.

கடந்த 2ஆம் தேதி மாலை சூர்யா கடையில் இருந்த போது இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் சூர்யாவிடம் வந்து 1000ரூபாய் மாமூல் கேட்டுளளனர். ஆனால் சூர்யா கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் கடைக்குள் புகுந்துள்ளது. 

கடைக்குள் இருந்த கல்லா பெட்டியில்  1000.ரூபாய் பணம் இருந்துள்ளது. அந்த பணத்தை எடுத்து கொண்டு ஓட முயன்றபோது, அதனைத் தடுக்க வந்துள்ளார் கடை உரிமையாளர் சூர்யா. உடனடியாக ஆத்திரமடைந்தவர்கள் அவரை பட்டா கத்தியால் தலையில் வெட்டியுள்ளனர். பின்னர் அங்கிருந்து தப்பி சென்றது.

இதனையடுத்து ரத்த வெள்ளத்தில் கிடந்த சூர்யாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். சிகிச்சைக்குப் பிறகு சூர்யா வீடு திரும்பினார். அவரது தலையில் தையல் போடப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பாக பொன்னேரி போலீசார் அருகருகே உள்ள கடைகளில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து மர்ம கும்பலை தேடி வந்தனர். இதில் கடையில் புகுந்து பட்டா கத்தியால் வெட்டிய எண்ணூரை சேர்ந்த தினேஷ்குமார், முன்னா ஆகிய இருவரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தனர். காவல்துறையினர் கைது செய்யும் போது தப்ப முயன்ற இருவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு மாவு கட்டு போடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News