பொன்னேரி அருகே புதிய வழித்தடத்தில் அரசு பேருந்து சேவை தொடக்கம்

பொன்னேரி அருகே புதிய வழித்தடத்தில் அரசு பேருந்து சேவையை சட்டமன்ற உறுப்பினர்கள் துவக்கி வைத்தனர்.;

Update: 2023-04-02 10:05 GMT
பொன்னேரி அருகே புதிய வழித்தடத்தில் அரசு பேருந்து சேவையை  சட்டமன்ற உறுப்பினர்கள் துவக்கி வைத்தனர்.

பொன்னேரி அருகே பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கையின் அடிப்படையில் புதிய வழித்தடத்தில் அரசு பேருந்து சேவை தொடங்கப்பட்டது. காங்கிரஸ், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கொடியசைத்து பேருந்து சேவையை தொடங்கி வைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே மீஞ்சூரில் இருந்து கல்பாக்கம், தேவதானம், காணியம்பாக்கம், மெரட்டூர், வேலூர், வழியே திருவெள்ளைவாயல் கிராமத்திற்கு புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்க அரசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து இன்று தேவதானம் ரங்கநாதர் கோவிலின் அருகே புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை துவக்க விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கும்மிடிப்பூண்டி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராசன் ஆகியோர் விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு புதிய வழித்தடத்தில் பேருந்து சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தனர். தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்கள் இருவரும் பேருந்தில் ஏரி பயணச்சீட்டு வாங்கி பயணித்து சாலை தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் அரசு போக்குவரத்து கழக திருவள்ளூர் மண்டல பொது மேலாளர் நெடுஞ்செழியன், திருவள்ளூர் மண்டல துணை மேலாளர் ஸ்ரீதர், பொன்னேரி பணிமனையின் மேலாளர் வெங்கடேசன், கட்சி நிர்வாகிகள் ஜெகதீசன், ஜி.ரவி, மதவிதன் சிங், பாண்டுரங்கன், தன்சிங், ஸ்டாலின், முனுசாமி, குமார், பார்த்தசாரதி, கஸ்தூரி மகேந்திரன், ஏ. ஆர்.டி.உதயசூரியன், குணாளன் ஆதியோர் உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News