நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்து சேவை மீண்டும் துவக்கம்

பொன்னேரியில் 10 ஆண்டாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்து சேவை மீண்டும் துவக்கி வைக்கப்பட்டது.

Update: 2022-06-23 09:45 GMT

பொன்னேரியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் சேவையை அமைச்சர் நாசர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதிக்குட்பட்ட ஆமூர், மாலிவாக்கம், அழிஞ்சிவாக்கம், உள்ளிட்ட கிராமங்களில் இந்த வழியாக தடம் டி 41 அரசு பேருந்து ஆமூர் கங்காடிகுப்பம், மாலிவாக்கம், செங்குன்றம்  வழியாக இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பத்தாண்டுகளாக பேருந்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக சுற்று வட்டார கிராமங்களில் உள்ள பள்ளி மாணவர்கள், விவசாயிகள், பொதுமக்கள், மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி இருந்தனர்

இது குறித்து அப்பகுதி மக்கள் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் திட்டத்தில் மனு அளித்திருந்தனர்.  இந்த மனு மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கையின் பேரில் கடந்த 10 ஆண்டுகளாக இயக்கப்படமால் இருந்த பேருந்து சேவையை பால்வள துறை அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைத்தார்

இந்நிகழ்ச்சியில் திருவள்ளுா் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ்,பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், கும்மிடிபூண்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன்,மற்றும் போக்குவரத்துறை அதிகாரிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News