பொன்னேரி அருகே விடிய விடிய நடைபெற்ற கங்கையம்மன் கோவில் ஜாத்திரை விழா
பொன்னேரி அருகே விடிய விடிய நடைபெற்ற கங்கையம்மன் கோவில் ஜாத்திரை விழா மிக சிறப்பாக நடைபெற்றது.;
பொன்னேரி அருகே விடிய விடிய நடைபெற்ற கங்கையம்மன் கோவில் ஜாத்திரை திருவிழாவில் கிராம மக்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த, ஏலியம்பேடு கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு கங்கையம்மன் கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலின் ஆனி மாத ஜாத்திரை திருவிழா வெகு விமரிசையாக கடந்த 13ஆம் தேதி காப்பு கட்டலுடன் துவங்கியது.
தினந்தோறும் கங்கையம்மன் பல்வேறு ரூபங்களில் வடிவமைத்து எழுந்தருளி பல்வேறு வாகனங்களில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.ஜாத்திரை திருவிழாவின் நிறைவு நாளில் அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பட்டு உடைகளாலும் திரு ஆபரணங்களால் அலங்காரம் செய்து மலரலங்காரத்தில் ஜொலித்த கங்கையம்மனுக்கு மஹாதீபாராதனை காட்டப்பட்டது.
இதனை தொடர்ந்து நள்ளிரவில் கிராமத்தின் மையத்தில் சாமியாடிகளின் முன்னிலையில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.இதையடுத்து பூங்கரகம் முன்னே செல்ல அலங்கரிக்கப்பட்ட கங்கையம்மன் பக்தர்கள் புடைசூழ மேளதாளம் முழங்க பெண்கள் உற்சாகத்துடன் நடனமாடிவர ஊர் முழுவதும் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதையடுத்து கிராம மக்கள் தாங்கள் வீட்டு முன்பு அம்மனுக்கு படையலிட்டு நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபட்டு சென்றனர்.