பொன்னேரி அருகே இலவச மருத்துவ முகாம்
பொன்னேரி அருகே திருப்பாலைவனத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.;
திருப்பாலைவனத்தில் அமெரிக்க வாழ் இந்திய மருத்துவர்கள் நடத்திய பொது மக்களுக்கான இலவச மருத்துவ முகாம்.
திருவள்ளூர் மாவட்டம்,திருப்பாலைவனத்தில் அமெரிக்க வாழ் இந்திய மருத்துவர்கள் நடத்திய மாபெரும் பொது மக்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை மற்றும் ரோட்டரி மெட்ராஸ் மேற்கு அமெரிக்க வாழ் இந்திய மருத்துவர்கள் இணைந்து விவேக் அம்பேத்கலாம் சமூக அறக்கட்டளை நிறுவனர் அசோக் பிரியதர்ஷன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமினை திருப்பாலைவனம் ஊராட்சி மன்ற தலைவர் பவானி கங்கை அமரன் துவக்கி வைத்தார்.
இதய நோய்,குடல் மற்றும் இரைப்பை,சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கான் மருத்துவம், பெண்கள்,குழந்தைகள், முதியோர் மற்றும் பெரியவர்களுக்கான மருத்துவம் நடைபெற்றது.சர்க்கரை மற்றும் இரத்த பரிசோதனைகள்,இ.சிஜி,எக்கோ மற்றும் ஸ்கேன் பரிசோதனைகள் நவீன கருவிகள் மூலம் நடைபெற்றது.
முகாமில் கலந்து கொண்ட சங்கீதா என்ற பெண்ணுக்கு சுமார் 16 லட்சம் செலவில் நடைபெற உள்ள அறுவை சிகிச்சைக்கு உதவி செய்வதாக ரோட்டரி சங்கம் உறுதி அளித்துள்ளதை கண்டு அப்பெண் கண்ணீருடன் நன்றி கூறினார்.
இந்த முகாமில் மெடிக்கல் யாத்ரா சேர்மன் டாக்டர் ஸ்வர்ணலதா மெய்யழகன்,ரோட்டரி கிளப் முன்னாள் தலைவர் ஸ்ரீதரன்,சென்னை ராமச்சந்திரா மருத்துவமனை துறைத்தலைவர் முரளிதரன்,ஒருங்கிணைப்பாளர் ராஜகோபால்,துணை ஒருங்கிணைப்பாளர் சாந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.