திருநிலை ஊராட்சியில் இலவச கண் கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி
திருநிலை ஊராட்சியில் இலவச மூக்கு கண்ணாடிகளை பயனளிகளுக்கு ஊராட்சி மன்ற தலைவர் அம்மு சிவகுமார் வழங்கினார்
திருநிலை ஊராட்சியில் இலவச மூக்கு கண்ணாடிகளை பயனளிகளுக்கு ஊராட்சி மன்ற தலைவர் அம்மு சிவகுமார் வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி, சோழவரம் ஒன்றியத்திற்கு உள்பட்ட திருநிலை ஊராட்சியில் இலவச கண் கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஊராட்சியில் உள்ள பொதுமக்களுக்கு கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. பின்னர் கண் பார்வை குறைபாடுள்ள 50-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு ரூ. 800 மதிப்புள்ள கண் கண்ணாடிகளை இலவசமாக திருநிலை ஊராட்சி மன்ற தலைவர் அம்மு சிவகுமார் வழங்கினார். இதில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தனசேகர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.