பள்ளி மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகள்: எம்.எல்.ஏ. வழங்கல்
Free Cycle Distributed To Students பொன்னேரி அருகே ஆரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு தமிழக அரசின் நிலையில்லா மிதிவண்டிகளை சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் வழங்கினார்.;
தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை ஆரணியில் 299 பள்ளி மாணவர்களுக்கு துரை.சந்திரசேகர் எம்.எல்ஏ வழங்கினார்.
Free Cycle Distributed To Students
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணியில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 176 மாணவிகளுக்கும்,123 மாணவர்களுக்கும் என மொத்தம் 299 மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி ஆரணி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு,பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் காவேரிஏழுமலை மற்றும் ஏகாம்பரம் ஆகியோர் தலைமை தாங்கினர்.ஆரணி பேரூர் திமுக செயலாளர் முத்து,அவைத்தலைவர்ஜி.ரமேஷ்,பொருளாளர்,கு.கரிகாலன்,ஆரணி பேரூராட்சிமன்ற துணைத் தலைவர் வழக்கறிஞர் சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில்,சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி தொகுதி காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றி பேசினார்.
Free Cycle Distributed To Students
மேலும்,அறிவியல் கண்காட்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கும்,சிலம்பப் போட்டியில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவிக்கும் நினைவு பரிசு,சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார்.மேலும், 100 சதவீத தேர்ச்சியை பெற்று பள்ளிக்கும்,தொகுதிக்கும் சிறப்பை சேர்க்க வேண்டும் என மாணவர்களை கேட்டுக் கொண்டார்.
பின்னர்,இப்பள்ளி வளாகத்தில் சுமார் 100 மீட்டர் சுற்றுச்சுவர் கட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி தலைமை ஆசிரியர் வேண்டுகோள் விடுத்தார். இதனை ஏற்று சுற்றுச்சுவர் கட்ட வேண்டிய பகுதியை பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக சட்டமன்ற உறுப்பினர் உறுதி கூறினார்.இந்நிகழ்ச்சியில், எஸ்.எம்.சி தலைவர்கள் சத்யா, நாகலட்சுமி,இ.வி.எஸ்.ரவி,ரகுமான்கான்,நிலவழகன், கலையரசி,நீலகண்டன், வி.எம்.எஸ்.விஜயகுமார்,முரளி,தினேஷ், சாய்சத்யம் மற்றும் இருபால் ஆசிரியர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.