பொன்னேரி அருகே மது போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய நால்வர் கைது

பொன்னேரி பேருந்து நிலையம் அருகே மது போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய நால்வரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2023-09-06 11:32 GMT

விபத்து ஏற்படுத்திய நால்வரை பிடித்த பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்த காட்சி.

பொன்னேரி பேருந்து நிலையம் அருகே மது போதையில் அதிவேகமாக காரை ஓட்டி 3 பேரை இடித்த போது காரில் இருந்த 4 பேரை பொது மக்கள் பிடித்து அடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி பேருந்து நிலையம் அருகே தாறுமாறாக ஓடிய கார் ஒன்று, இரு சக்கர வாகனத்தில் குழந்தையுடன் சென்றவர்களை இடித்து தள்ளி விட்டு நிற்காமல் சென்றது.இதனை கண்ட பொது மக்கள், விபத்து ஏற்படுத்தி விட்டு அதிவேகமாக சென்ற காரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.

அப்போது காரில் இருந்த 4 பேர் மது போதையில் இருந்தது தெரியவரவே, அந்த நால்வரையும் பிடித்து அடித்து துவைத்தனர்.தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற பொன்னேரி காவல் ஆய்வாளர் சின்னதுரையிடம் 4 பேரையும் ஒப்படைத்தனர்.பின்னர் அந்த 4 பேரையும் பொன்னேரி அரசு மருத்துவ மனையில் அனுமதித்த காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அதிவேகமாக காரை இயக்கி விபத்து ஏற்படுத்திய 4 பேரும் சென்னை வளசரவாக்கம் பகுதியை சேர்ந்த பாஸ்கர்(28), தனீஸ்வரன்(23), அஜீத் குமார் (26), அருண்(34) எனவும், இவர்கள் பழவேற்காடு சென்று விட்டு மது போதையில் காரை இயக்கியதும்தெரியவந்துள்ளது. இதனைதொடர்ந்து விபத்து ஏற்படுத்திய 4 பேரையும் போலீசார் கைது செய்து பொன்னேரி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News