ஆமூர் ஊராட்சியில் புதிய பள்ளி கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது

பொன்னேரி அருகில் உள்ள ஆமூர் ஊராட்சியில் சுமார் 17 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

Update: 2021-07-14 01:45 GMT

புதிய கட்டடம் கட்டுவதற்கு கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே. கோவிந்தராஜன் அடிக்கல் நாட்டினார்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி தொகுதிக்குட்பட்ட சோழவரம் வடக்கு ஒன்றியம் ஆமூர் ஊராட்சியில் சுமார் 17 லட்சம் மதிப்புள்ள பள்ளி கட்டடத்திற்கு பூமி பூஜை நடைபெற்றது.

திருவள்ளூர் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே. கோவிந்தராஜன் அடிக்கல் நாட்டினார். சோழவரம் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி, ஊராட்சி மன்ற தலைவர் பிரியா ஆனந்தன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News